இந்தியாவில் 6 நாட்களுக்குப்பின் 30 ஆயிரமாகக் குறைந்திருந்த கரோனா தொற்று கடந்த 24 மணிநேரத்தில் 42 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 562 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிகாக 42 ஆயிரத்து 625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 17 லட்சத்து 69ஆயிரத்து 132ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 353 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 5,395 பேர் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில், 1.29 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
» தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான திட்டம் இல்லை: மத்திய அமைச்சர் விளக்கம்
» 2-வது அலை இன்னும் ஓயவில்லை; கவனத்துடன் இருக்க வேண்டும்: மத்திய அரசு எச்சரிக்கை
கரோனாவில் இருந்து இதுவரை 3 கோடியே 9 லட்சத்து 33 ஆயிரத்து 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 562 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 25 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 18 லட்சத்து 47 ஆயிரத்து 518 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 47 கோடியே 31 லட்சத்து 42 ஆயிரத்து 307 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 48.52 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago