தன்னை பலாத்காரம் செய்த மதகுருவை திருமணம் செய்ய அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
கேரள மாநிலம் கோட்டியூரைச் சேர்ந்த மதகுரு ராபின் வடக்கும்சேரி. இவர் குழந்தையை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் உள்ளார். தான் பலாத்காரம் செய்த சிறுமி வளர்ந்து பெண்ணாகிவிட்டதால் அவரையே திருமணம் செய்ய அனுமதி கோரி மதகுருவும் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும் தற்போது மதகுருவை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினித் சரண், தினேஷ் மகேஸ்வரி முன் இன்று விசாரணைக்கு வந்தது. மதகுரு சார்பில் வழக்கறிஞர் வினித் ஜார்ஜும், பாதிக்கப்பட்ட பெண் சார்பில் வழக்கறிஞர் கிரண் சூரியும் ஆஜராகினர்.
மதகுரு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் ஜார்ஜ் வாதிடுகையில் “ அரசியலமைப்புச் சட்டத்தின்படி திருமணம் செய்ய மனுதாரருக்கு உரிமை இருக்கிறது, அதை தடுக்க முடியாது. மனுதாரரும், மனுதாரரால் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஜாமீன் கேட்டும் கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது” எனத் தெரிவித்தார்
அப்போது நீதிபதிகள் அமர்வு “ உங்கள் மனுதாரருக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணும் இடையிலான வயது வித்தியாசம் எத்தனை” என்று வழக்கறிஞர் ஜார்ஜிடம் கேட்டனர். அதற்கு வழக்கறிஞர் ஜார்ஜ், “ மனுதாருக்கு 49 வயதும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தற்போது 25 வயதாகிறது” என்றார்.
அதற்கு நீதிபதிகள் அமர்வு, “ இந்த வழக்கில் ஒவ்வொரு அம்சத்தையும் ஆய்வு செய்தபின்புதான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” எனத் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் தரப்பு வழக்கறிஞர் கிரண் சூரி வாதிடுகையில் “ போலீஸார் பாதுகாப்போடு அந்த மதகுருவை அனுப்பிவையுங்கள் அவரோடு திருமணம் செய்து கொள்ள மனுதாரர் ஆர்வமாக உள்ளார்” எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள் அமர்வு “ கேரள உயர் நீதிமன்றத்திடம் சென்று முறையிடுங்கள். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிடாது” என மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
30 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago