சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி பகுதியில் ராமர் கோயிலை மீண்டும் கட்டுவதற்கு ஆதரவாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த மனுவுடன் 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு மனுவையும் சேர்த்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
2010-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சர்ச்சைக்குரிய அந்தப் பகுதியை ராமர் பிறந்த இடமாகவும் அங்கு இந்துக்கள் வழிபாடு நடத்த உரிமை உள்ளது என்றும் தீர்ப்பளித்தது.
ஆனால் அடுத்தபடியாகவே உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அமலாக்கம் செய்வதற்கு தடை விதித்தது. இதனையடுத்தே இந்த விவகாரம் இத்தனையாண்டுகள் இழுபறியில் இருந்து வருகிறது.
இதனையடுத்து, சுப்பிரமணியன் சுவாமி இந்திய அரசியல் சட்டமைப்பு 32-ம் பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்களால் வழிபாடு செய்யும் அடிப்படை உரிமைகள் தடுக்கப்பட்டுள்ளது என்று மனு செய்தார்.
அயோத்தியில் இந்துக்கள் வழிபடுவதற்கு வழிவகை செய்யுமாறு, அங்கு ராமர் கோயில் கட்ட உத்திரப் பிரதேச அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சாமி தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், ராமர் இப்பகுதியில் (ராமஜென்மபூமி) பிறந்ததற்கான ஆதாரங்கள் உறுதிபட நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் இந்துக்களுக்கு இது புனிதமான இடம் என்றும் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
“உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் பெரும்பான்மையான தீர்ப்பில் இஸ்லாம் மதத்தில் மசூதி என்பது ஒரு முக்கியமான பகுதி அல்ல என்றும், மாறாக யு.கே. ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் கருத்தின் படி பயனில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், சேதமடைந்திருந்தலும் இடிக்கப்பட்டிருந்தாலும் கோயில் கோயிலே என்று அறுதியிட்டுள்ளது. எனவே ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவதற்கான உரிமை உள்ளது. இதனை இந்திய அரசியல் சாசன பிரிவு 25 மற்றும் 21 ஆகியவையும் உறுதி செய்கிறது” என்று தன் மனுவில் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இதனையடுத்து அமர்வின் நீதிபதி அருண் மிஸ்ரா, “எனவே, அயோத்தியாவில் அதே இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்கிறீர்கள்” என்று கேட்டனர்.
மேலும் நீதிபதி கோபால கவுடா கேட்கையில், “இதற்கு ஏன் உயர் நீதிமன்றத்திடம் செல்லாமல் நேரடியாக எங்களிடம் வந்தீர்கள்? அதுவும் இது பற்றிய மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ள போது உங்கள் மனுவை நாங்கள் எப்படி ஏற்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து சுப்பிரமணியன் சாமி மனுவை இடையீட்டு மனுவாகக் கருதி மற்ற மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வரும்போது சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago