எளிமையாகும் காப்புரிமை, பதிப்புரிமை பதிவு முறை: பியூஷ் கோயல் தகவல்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் காப்புரிமை மற்றும் பதிப்புரிமை பதிவு முறை மிகவும் எளிமையாகி வருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

மும்பையில் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர், வலிமை மற்றும் துடிப்பு மிக்க அறிவுசார் சொத்துரிமை உள்கட்டமைப்பை நிறுவுவதற்கான வழிகள் குறித்து ஆராய்ந்தார். அப்போது அவர் கூறியதாவது:

காப்புரிமைகள், வடிவமைப்புகள், பதிப்புரிமைகள் மற்றும் வர்த்தகம் முத்திரைகளை ஆராய்வதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து திருப்தி அளிக்கின்றன. புதுமைகளின் மையமாக இந்தியா உருவாவதற்கு வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் பெரிய அளவில் உதவும்.

புது நிறுவனங்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பெண் தொழில் முனைவோருக்கான கட்டணங்கள் 80 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளன.

அறிவுசார் சொத்துரிமை செயல்முறை முன்பை விட எளிமை மற்றும் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

அலுவலர்கள் காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தின் அலுவலர்கள், பதிவு செய்தல் மற்றும் சேவைகளை பெறுவதை எளிமை படுத்துவதற்காக முடிவெடுப்பதற்கான கால அளவு மற்றும் டிஜிட்டல் முறைக்கு மாறுதல் உள்ளிட்ட ஒட்டுமொத்த செயல்முறையும் மறுசீரமைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உதாரணத்திற்கு, வர்த்தக முத்திரை விதிகளின் கீழ் முன்பிருந்த 74 படிவங்கள் 8 ஒருங்கிணைந்த படிவங்களாக மாற்றப்பட்டுள்ளதாக கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்