இந்தியாவில் கரோனா தொற்று 6-வது நாளாக அதிகரிப்பு: உயிரிழப்பு 422

By பிடிஐ

இந்தியாவில் தொடர்ந்து 6-வது நாளாக கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 422 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிகாக 40 ஆயிரத்து 134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 16 லட்சத்து 95 ஆயிரத்து 958 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 13 ஆயிரத்து 178 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 2,766 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில், 1.31 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கரோனாவில் இருந்து இதுவரை 3 கோடியே 8 லட்சத்து 57 ஆயிரத்து 467 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.35 ஆகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 422 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் 157 பேர், கேரளாவில் 56 பேர், ஒடிசாவில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 24.ஆயிரத்து 733 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 14 லட்சத்து 28 ஆயிரத்து 984 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 46 கோடியே 96 லட்சத்து 45 ஆயிரத்து 494 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 47.22 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்