இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. கடந்த 24மணிநேரத்தில் 41,831 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 541 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிகாக 41 ஆயிரத்து 831 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 16 லட்சத்து 55 ஆயிரத்து 824 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 952 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 2,032 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில், 1.30 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கரோனாவில் இருந்து இதுவரை 3 கோடியே 8 லட்சத்து 20 ஆயிரத்து 521 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.36 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 541 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் 225 பேர், கேரளாவில் 80 பேர், ஒடிசாவில் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 24 ஆயிரத்து 351 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 17 லட்சத்து 89 ஆயிரத்து 472 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 46 கோடியே 82 லட்சத்து 16 ஆயிரத்து 510மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 47.02 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago