கேரளா மட்டுமின்றி மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக பாதிப்பு 43,689, 43,509 என்ற அளவில் இருந்தது. கடந்த 24 மணிநேரத்தில் 44 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதன் பிறகு 22 நாட்களில் இல்லாத அளவில் தொற்று அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,05,155 ஆக உள்ளது. இதுவரை மொத்தம் 3,07,43,972 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் விகிதம் 97.38 சதவீதமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 42,360 பேர் குணமடைந்துள்ளனர். வாராந்திர தொற்று உறுதி விகிதம் 2.43 சதவீதமாக உள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 46.46 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று உயர்ந்து வருவதற்கு ஒரு சில மாநிலங்களில் தொற்று விகிதம் உயர்ந்து வருவது காரணமாக உள்ளது. கேரளாவில் 22,064 பேருக்கு தொற்று உறுதியானது. அங்கு தொடர்ந்து 3-வது நாளாக பாதிப்பு 22 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
மகாராஷ்டிராவில் 7,242 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஒரு வாரத்தில் அதிகபட்ச பாதிப்பு ஆகும்.
கர்நாடகாவில் ஒரே நாளில் தொற்று விகிதம் 34 சதவீதம் அதிகரித்துள்ளது. 19 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு புதிதாக 2,052 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழ்நாட்டில் 68 நாட்களாக பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் நேற்று உயர்ந்தது. முந்தைய நாள் பாதிப்பு 1,756 ஆக இருந்த நிலையில் நேற்று 1,859 பேராக உயர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago