மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இந்த ஆண்டில் 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப் படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. இதேபோல, மற்ற மாநிலங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மருத்துவ இடங்களை வழங்குகின்றன.
இந்த இடங்களில் 50 சதவீதத்தை ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடாக வழங்க உத்தர விடக்கோரி திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் எப்போது இடஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது.
» கேரளாவை மிரட்டும் கரோனா: நாட்டின் மொத்த பாதிப்பில் 37 சதவீதம்: மத்திய குழு விரைகிறது
» 45 கோடி கோவிட் தடுப்பூசிகள்; இந்தியா புதிய சாதனை: சுகாதார அமைச்சகம் பெருமிதம்
இந்நிலையில் மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பு கல்வியாண்டில் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளில் அகில இந்திய கோட்டாவில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இத்தகவலை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சுமார் 1,500 மாணவர்கள் இளங்கலை மருத்துவ படிப்புகளில் பயன்பெறுவர். முதுகலை மருத்துவப் படிப்புகளில் ஆண்டுக்கு சுமார் 2,500 மாணவர்கள் பயன்பெறுவர்.
இளங்கலை பல்மருத்துவ படிப்பு, முதுகலை பல் மருத்துவ படிப்புகளிலும் இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது.
இதுதவிர பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் இந்த ஆண்டு முதல் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் மத்திய அரசு முடிவு அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago