கேரளாவில் கோவிட்-19 பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில் உயர் நிலைக் குழுவை மத்திய அரசு விரைந்து அனுப்புகிறது.
கேரளாவில் அன்றாட கோவிட் பாதிப்புகள் கணிசமாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு கோவிட்-19 மேலாண்மைக்கான பொது சுகாதார நடவடிக்கைகளை மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து வலுப்படுத்துவதற்காக உயர்நிலை பல்துறைக் குழுவை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கேரளாவிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
நோய் கட்டுப்பாட்டு தேசிய மையத்தின் இயக்குநர் டாக்டர் எஸ் கே சிங் தலைமையில் இந்த 6 உறுப்பினர்கள் அடங்கிய மத்திய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, ஜூலை 30-ஆம் தேதி கேரளா சென்றடைந்து சில மாவட்டங்களைப் பார்வையிடும்.
» 45 கோடி கோவிட் தடுப்பூசிகள்; இந்தியா புதிய சாதனை: சுகாதார அமைச்சகம் பெருமிதம்
» ட்விட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 7 கோடி: பிரதமர் மோடி சாதனை
மாநில சுகாதார துறைகளுடன் மத்திய குழு இணைந்து பணியாற்றி தற்போதைய கள நிலவரம் குறித்து கேட்டறிவதோடு, மாநிலத்தில் பதிவாகும் பாதிப்பின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளையும் பரிந்துரை செய்யும்.
கேரளாவில் தற்போது 1.54 லட்சம் பேர் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாட்டின் மொத்த பாதிப்பில் இது 37.1% ஆகும். கடந்த 7 நாட்களில் இந்த எண்ணிக்கை 1.41% வளர்ச்சியடைந்துள்ளது.
சராசரி தினசரி பாதிப்புகள் இந்த மாநிலத்தில் 17,443 க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்த தொற்று உறுதி வீதம் 12.93% ஆகவும், வாராந்திர சதவீதம் 11.97% ஆகவும் உயர்ந்துள்ளது. 6 மாவட்டங்களில் வாராந்திர நோய்த்தொற்று உறுதி விகிதம் 10%க்கும் அதிகமாக உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago