‘மனதளவில் ஏற்பட்ட பாதிப்பால் தவறான உத்தரவு பிறப்பித்து விட்டேன்’ என்று நீதிபதி கர்ணன் ஒப்புக் கொண்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் சமீபத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதி கர்ணன், தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனது உதவியாளர் மூலம் ஏப்ரல் 29-ம் தேதிக்குள் பதிலளிக்கும் வகை யில் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப் பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், பானுமதி அடங்கிய அமர்வு, நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்ததுடன், அவருக்கு நீதிமன்ற பணிகள் எதையும் வழங்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவு பிறப்பித்தது.
நீதிபதி கர்ணன் தனது உத்தரவை குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய சட்டத்துறை அமைச்சர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தேசிய ஆணையம் மற்றும் சோனியா காந்தி, ராம் விலாஸ் பஸ்வான், மாயாவதி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அனுப்பி வைத்திருந்தார்.
இந்நிலையில், நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மற்றும் நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், பானுமதி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில், ‘உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து நான் பிறப்பித்த உத்தரவு தவறானதுதான். உடன் பணி யாற்றிய நீதிபதிகள் சிலர் என்னை கேலி செய்தது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தேன். அதன் விளைவாக, அப்படி ஓர் உத் தரவு பிறப்பித்து விட்டேன். இனி நீதித்துறையின் மாண்புக்கு கட்டுப் பட்டு நடந்து கொள்வேன். இணக்க மான சூழ்நிலையை பின்பற்று வேன்’என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago