ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரண் தலைமையிலான அரசை கவிழ்க்க ரூ.1 கோடி வழங்குவதாக சிலர் என்னிடம் பேரம் பேசினர் என்று காங்கிரஸ் எம்எல்ஏ புகார் கூறி யுள்ளார்.
ஜார்க்கண்டில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளின்கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஜேஎம்எம் கட்சியின் ஹேமந்த் சோரண் முதல்வராக உள்ளார். இந்நிலையில், ஹேமந்த் சோரண் தலைமை
யிலான கூட்டணி அரசை கவிழ்க்க சதி செய்ததாக கடந்த 24-ம் தேதி 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கோலபிரா தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ நமன் பிக்சல் கொங்காரி நேற்று முன்தினம் கூறும்போது, “என்னுடைய கட்சித் தொண்டர்கள் மூலம் 3 பேர் என்னை சந்தித்தனர். அப்போது ஹேமந்த் சோரண் அரசை கவிழ்த்தால் ரூ.1 கோடி ரொக்கம் தருவதாகக் கூறினர்.
அத்துடன் அமைச்சர் பதவியும் கிடைக்கும் என தெரிவித்தனர். பாஜகவுக்காக இதைச் செய்வதாக அவர்கள் கூறினர்.இதுகுறித்து எங்கள் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் அலம்கிர் ஆலம், கட்சியின் மாநில பொறுப்பாளர் ஆர்பிஎன் சிங், முதல்வர் உள்ளிட்டோரிடம் தகவல் தெரிவித்தேன்” என்றார். - பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago