மக்களவைக்கு எதிர்க்கட்சித் தலைவர் இன்னும் அறிவிக்கப் படாத நிலையில் காங்கிரஸுக்கு ஐக்கிய ஜனதா தளம் அளித்த ஆதரவால் எந்தப் பலனும் இல்லை எனக் கருதப்படுகிறது.
மக்களவையில் இரண்டு உறுப்பினர்களை வைத்திருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கடந்த வெள்ளிக்கிழமை தனது ஆதரவை காங்கிரஸுக்கு அளித்தது.
இது குறித்து அக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான கே.சி.தியாகி கூறியபோது, ‘இதே போன்ற ஒரு சூழல் பிஹாரின் சட்டமன்றத்தில் நிலவியபோது அன்றைய முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை அளித்தார். அந்தக் கட்சிக்கு அதை ஏற்கத் தேவையான குறைந்தபட்ச உறுப்பினர்கள் இல்லாமல் இருந்தனர். எனினும் அதன் சார்பில் எதிர்கட்சித் தலைவராக அப்துல்பாரி சித்திக்கீ இருந்தார்’ எனக் கூறினார்.
எனவே மக்களவையின் எண் ணிக்கையில் தேவையான பத்து சதவிகித உறுப்பினர்கள் இல்லை என்றாலும் காங்கிரஸுக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி அளிக் கப்பட வேண்டும் எனவும் இதற்கு மற்ற கட்சிகளும் ஆதரவை அளிக்க முன்வர வேண்டும் எனவும் தியாகி வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸுக்கு கட்சிகள் தரும் ஆதரவை வைத்து அதற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி அளிக்க நாடாளுமன்ற விதிகளில் இடம் இல்லை எனவும் இந்தக் கட்சிகள் ஒன்றாக இணைந்து நாடாளுமன்றத்துக்காக ஒரு அணியாக சேர்ந்தால் அப் பதவியை பெற வாய்ப்பிருப் பதாகவும் அரசியல் கட்சிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு அந்த அணியின் சார்பில் மக்களவைக்கு ஒரே தலைவர் மற்றும் ஒரே கொறடா இருப்பது அவசியம். பல்வேறு கொள்கைகளை கொண்ட கட்சிகளுக்கு இது நடைமுறை யில் சாத்தியம் இல்லை எனக் கருதப்படுகிறது.
இது குறித்து தி இந்துவிடம் நாடாளுமன்ற அதிகாரிகள் வட்டாரம் கூறியபோது, ‘பத்து சதவிகித உறுப்பினர்கள் அல்லது அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி என்ற இருவிதிகள் மட்டுமே எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு உள்ளது. இதை சாதகமாக கொண்டுதான் 1980 முதல் 89 வரை இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது, எதிர்க்கட்சித் தலைவ ரின்றி ஆட்சி செய்தனர். அதே முறையை பாஜகவும் கடைப் பிடிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது’ எனக் கூறுகின் றனர்.
எனினும் கடந்த இருபது ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் பல புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்திருப்பதாகவும் இந்த விவகாரத்தில் காங்கிரஸை பாஜக பின்பற்றாது எனவும் அவர் கள் மேலும் தெரிவித்தனர்.
எனினும் கடந்த ஆட்சியில் லோக்பால், மனித உரிமை ஆணையம், மத்திய விஜிலென்ஸ் ஆணையம், நாடாளுமன்ற செகரட்டரி ஜெனரல் உட்பட அரசியலமைப்பு சட்டங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பல அமைப்புகளின் தலைமை பதவிகளுக்கு மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் ஆதரவும் அரசுக்கு தேவைப்படுவதாகவும் இதற்காக தேவையான உறுப்பி னர்கள் இல்லை என்ற காரணத்தை வைத்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை நரேந்திர மோடி அரசு புறக்கணிக்க முடியாது எனவும் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago