ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஜூன் 25-ம் தேதி தொடங்க உத்தரவு

By ஏஎன்ஐ

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை வரும் ஜூன் 25-ம் தேதி தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக சென்னை உட்பட 20 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்றப்பட உள்ளன.

இதுதொடர்பாக 20 நகரங்களின் மாநகராட்சி ஆணையர்கள் பங் கேற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடை பெற்றது. மத்திய நகர்ப்புற மேம் பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.

அவர் பேசியதாவது: ஸ்மார்ட் நகரங்கள் தேர்வில் எவ்வித பாகு பாடும் காட்டப்படவில்லை. நேர்மை யான போட்டியின் அடிப்படை யிலேயே முதல்கட்டமாக 20 நகரங் கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த நகரங்கள் வரும் ஜூன் 25-ம் தேதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தொடங்க வேண்டும். இத்திட்டத்துக்காக ஒதுக்கப்படும் நிதியை வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்