கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு யாரும் தன்னை நிர்பந்திக்கவில்லை என்று கூறிய எடியூரப்பா, தனக்கு பிறகு யார் முதல்வர் பதவி ஏற்ககூடும் என்பது பற்றியும் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த இரு ஆண்டுகளாக கர்நாடகமுதல்வராக இருக்கும் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பாஜகவினரே கருத்துகள் கூறி வருகின்றனர். கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக எம்எல்ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் பகிரங்கமாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் எடியூரப்பாவை விமர்சிக்கின்றனர்.
அத்துடன் எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் முதல்வர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் எனவும் பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர். இதனால் பாஜக மேலிடபொறுப்பாளர் அருண் சிங் கடந்த மாதம் பெங்களூருவில் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தினார்.
எடியூரப்பா அண்மையில் தனது மகன் விஜயேந்திராவுடன் அவசரமாக டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது எடியூரப்பா பதவி விலக தயாராக இருப்பதாக கூறியதாக தெரிகிறது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் இறங்கினர். அவர்களை எடியூரப்பா சமாதானம் செய்தார்.
» மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு?- இதை எதற்காக செய்கிறார்கள்: காங்கிரஸ் சரமாரி கேள்வி
» பெகாசஸ் ஒட்டுகேட்பு; எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் முடங்கியது
இந்தநிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தில் எடியூரப்பா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
பின்னர் அவர் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் அடுத்த முதல்வர் பதவியேற்கும் வரை இடைக்கால முதல்வராக தொடரும்படி கேட்டுக் கொண்டார்.
இதனிடையே எடியூரப்பாக ராஜினாமா செய்ததை கேட்ட அதிர்ந்து போன அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா கூறியதாவது:
என்னை ராஜினாமா செய்யுமாறு யாரும் நிர்பந்திக்கவில்லை.
ஒரு மாதத்துக்கு முன்பே பதவியில் இருந்து விலக முடிவு செய்தேன். அதன்படி விலகுகிறேன். எனது ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக ஆளுநர் தெரிவித்தார்.
எனக்கு பிறகு யார் முதல்வர் பதவி ஏற்ககூடும் என்பது பற்றி எனக்கு தெரியாது. அதேசமயம் அடுத்த தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவை பெறச் செய்வது மட்டுமே எனது இலக்கு.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
31 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago