ஒரே நாளில் 40 ஆயிரம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர்: புதிதாக 39 ஆயிரம் பேருக்கு தொற்று

By பிடிஐ


இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவிலிருந்து 39ஆயிரத்து 972 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிகாக 39 ஆயிரத்து 742 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 13 லட்சத்து 71 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 8 ஆயிரத்து 212 ஆக குறைந்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 765 பேர் கூடுதலாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனாவில் இருந்து குணமடைந்து இதுவரை 3 கோடியே 5 லட்சத்து 43 ஆயிரத்து 38 பேர் வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.36 ஆகக் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 535 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 20ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நாட்டில் 43.31 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்