சட்ட விரோதமாக துப்பாக்கி உரிமங்களை வழங்கிய புகாரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை முதல் 22 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டு வருகிறது. ஐஏஏஸ் அதிகாரியான பழங்குடியின விவகாரத்துறைய செயலாளரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான ஷாகித் இக்பால் சவுத்ரி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமாக துப்பாக்கி உரிமங்களை வழங்கிய புகாரில் அவரது இல்லத்திலும் சிபிஐ சோதனை நடைபெறுகிறது.
கதுவா, ரேசாய், ராஜோரி மற்றும் உதாம்பூர் மாவட்டங்களில் துணை ஆணையராக பணியாற்றிய ஷாகித் இக்பால் சவுத்ரி,அந்த சமயத்தில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி உரிமங்களை போலி பெயர்களில் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டெல்லியில் அவரது தொடர்புடைய இடங்களிலும் இந்த சோதனை நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago