கேரளாவில் இன்று ஒரே நாளில் 17,518 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது.
மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்தது. அதேநேரத்தில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சில மாநிலங்களில் மட்டும் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த மாநிலங்களுக்கு மத்தியக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
» நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி; தலா ரூ.2 லட்சம் இழப்பீடு: பிரதமர் மோடி இரங்கல்
» ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் திறன் கொண்ட ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி
இந்தநிலையில் கேரளாவில் சில நாட்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று 12,818 பேருக்கு கரோனா உறுதியான நிலையில் இன்று அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 17,518 பேருக்கு தொற்று உறுதியானது. 132 பேர் பலியாகியுள்ளனர். 11,067 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நோய் பதிப்பு 13.63 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
15 hours ago