மூன்று நாளில் இரண்டாவது முறையாக ஆகாஷ் ஏவுகணையை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை ஒடிசாவின் சண்டிப்பூர் கடற்கரைக்கு அப்பால் ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில், டிஆர்டிஓ இன்று காலை 11.45 மணிக்கு வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. வானில் அதிவேகத்தில் அனுப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை இந்த ஏவுகணை துல்லியமாக இடைமறித்து தாக்கி அழித்தது.
இதன் செயல்பாடுகள் ரேடார், எலக்ட்ரோ ஆப்டிக்கல் கண்காணிப்பு கருவிகள், கட்டுப்பாட்டு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டன. மோசமான வானிலையிலும் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் அனைத்து வானிலை சூழலிலும், இந்த ஏவுகணை வெற்றிகரமாக செயல்படும் என்பதை நிருபித்துள்ளது.
இந்த பரிசோதனையை விமானப்படை அதிகாரிகள் குழுவும் பார்வையிட்டது. இந்த ஏவுகணை வானில் அதிவேகத்தில் வரும் எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் திறன் உடையது. இந்திய விமானப்படைக்கு இது நிச்சயம் வலு சேர்க்கும்.
கடந்த ஜூலை 21ம் தேதியும், ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூன்று நாள் இடைவெளியில், 2வது முறையாக ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டதற்கு, டிஆர்டிஓ, இந்திய விமானப்படை, மற்றும் ஏவுகணை தயாரிப்பில் தொடர்புடையவர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார். இந்த நவீன ஏவுகணை உருவாக்கியுள்ளது, இந்திய விமானப்படையின் பாதுகாப்பு திறன்களை மேலும் அதிகரிக்கும்.
அதிவேக வான் இலக்குகளை இடைமறித்து தாக்கும் புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனையின் வெற்றிக்காக டிஆர்டிஓ குழுவினருக்கு அதன் தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago