அருணாச்சலப் பிரதேச மாநில காங்கிரஸ் அரசை கலைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆளுநர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், தீபக் மிஸ்ரா, மதன் லோக்கூர், பி.சி.கோஸ், என்.வி.ரமணா ஆகிய 5 நீதி பதிகள் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 361-ன் படி, குடியரசுத் தலைவர், ஆளுநரை விசாரிக்க முடியாது’ என்று வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை வாபஸ் பெற்றது.
அருணாச்சல் முதல்வர் நபம் துகி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஃபாலி நாரிமன், கபில் சிபல் ஆகியோர், ‘குடியரசுத் தலைவர் ஆட்சி பரிந்துரைக்கப் பட்ட சில மணி நேரத்தில் முதல்வர், அமைச்சர்களின் அலுவலகங் களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினி தகவல்களை எடுத்துச் சென்றுள் ளனர். ஊழல் மற்றும் தீவிரவாதி களுடன் தொடர்பு போன்ற குற்றச் சாட்டுகளின் அடிப்படையில்தான் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதிட வேண்டும் என்றால், கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்கள் தேவை. எனவே, அவற்றை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டனர்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘கைப்பற்றப்பட்ட ஆவண பிரதிகளை முதல்வர், அமைச்சர்கள் தரப்புக்கு மத்திய அரசு வழங்க உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago