கரோனா காலத்தில் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானம் உலக சாதனை: நிதின் கட்கரி பெருமிதம்

By செய்திப்பிரிவு

கோவிட் கட்டுப்பாட்டுக் காலத்தில், தேசிய நெடுஞ்சாலை கட்டுமானம் நாள் ஒன்றுக்கு 36.5 கி.மீ என்ற அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

2020-21ம் ஆண்டில் நெடுஞ்சாலை கட்டுமானம் நாள் ஒன்றுக்கு 36.5 கி.மீ என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தில் மிக அதிகமான வேகம்.

24 மணி நேரத்தில் 2.5 கி.மீ தூரத்துக்கு நான்கு வழி கான்கிரீட் சாலை அமைத்தும், 21 மணி நேரத்தில் 26 கி.மீ தூரத்துக்கு ஒற்றை வழி தார் சாலை அமைத்தும், இந்தியா உலக சாதனை படைத்துள்ளது.

இந்த கட்டுமான வேகத்தை தக்க வைக்க, சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒப்பந்தகாரர்களுக்குத் தேவையான உதவி, விதிமுறையில் தளர்வு, துணை ஒப்பந்தகாரர்களுக்கு நேரடி பண விநியோகம், சாலை பணியாளர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவை அடங்கும்.

இந்தத் திட்டங்களில் தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்ய சாலை கட்டுமானங்கள், இந்திய சாலைகள் அமைப்பு (IRC) தரக்கட்டுப்பாடுடனும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் விவரக் குறிப்புகளுடனும், மேற்கொள்ளப்படுகின்றன.

தர மேம்பாட்டு முறைக்கு கொள்கை வழிகாட்டுதல், பரிசோதனை மற்றும் உத்தரவுகளை அவ்வப்போது தெரிவிக்க தரக்கட்டுப்பாடு மண்டலம் அமைக்கப்படும்.

இவ்வாறு நிதின்கட்கரி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்