மணிப்பூரில் அடுத்த திருப்பம்; காங்கிரஸ் தலைவர் ராஜினாமா?- பாஜகவில் இணைய திட்டம்

By செய்திப்பிரிவு

மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்தாஸ் தமது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜகவுக்கு 21 இடங்கள் கிடைத்தன. சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்தது. பிரேன் சிங் முதல்வராக உள்ளார்.

தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏ-க்கள், ஒரு சுயேச்சை எம்எல்ஏ, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஆகியோர் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர். பின்னர் கட்சித் தலைமை சமாதானம் செய்ததை தொடர்ந்து அரசுக்கு ஆதரவளித்தனர்.

முதல்வர் பிரேன் சிங்

இதன்பின்னர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பாஜகவில் இணைந்து வருகின்றனர். தற்போது மணிப்பூர் சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

மணிப்பூர் மாநில சட்டப்பேரவைக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்தாஸ் தமது பதவியை இன்று ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. அவருடன் மேலும் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்