117 நாட்களில் குறைவு; கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை  4,06,130

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா தொற்றுக்காக 4,06,130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; 117 நாட்களில் இந்த எண்ணிக்கை மிகக் குறைவாகும்.

இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளதாவது:
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 41.18 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும், இதுவரை 3,03,53,710 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

குணமடைந்தவர்களின் சதவீதம் 97.37% ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 45,254 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், 30,093 புதிய பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகி உள்ளன; 125 நாட்களில் இது மிகக் குறைவு.

இந்தியாவில் கரோனா தொற்றுக்காக 4,06,130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; 117 நாட்களில் இது மிகக் குறைவு.

இது மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 1.30% ஆகும்.

வாராந்திர தொற்று உறுதி விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து 2.06% ஆக உள்ளது.

தினசரி தொற்று விகிதம் தொடர்ந்து 29 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக 1.68%, ஆகப் பதிவாகி உள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 44.73 கோடி ஆகும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்