எனது செல்போனை ஐந்துமுறை மாற்றிவிட்டேன்; ஒட்டுகேட்பு மட்டும் ஓயவில்லை: பிரசாந்த் கிஷோர்

By செய்திப்பிரிவு

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தனது செல்போனை இதுவரை ஐந்து முறை மாற்றிவிட்டதாகவும் இருந்தாலும்கூட ஒட்டுக்கேட்பு பிரச்சினை ஓயவில்லை என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேரை பல்வேறு உலக நாடுகளும் தீவிரவாதத் தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக வாங்கியுள்ளன. அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது.

இப்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சை இந்தியா அந்த உளவு மென்பொருளைக் கொண்டு 40 பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரை உளவு பார்த்தது என்பதுதான்.

உளவு பார்க்கப்பட்டோர் பட்டியலில் பிரசாந்த் கிஷோரும் இடம்பெற்றுள்ளார். 2014ல் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து மோடி பிரதமராக தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்தவர் தான் இந்த பிரசாந்த் கிஷோர். நமோ என்ற பெயரை ஒரு பிராண்ட் மதிப்பீடாக உயர்த்திக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்.

மோடி அலை, மோடி அலை என இந்தியா முழுவதும் பேசவும், குஜராத் மாடல் வளர்ச்சி என்று அனைவரும் விவாதிக்கவும் வழிவகுத்தவர் பிரசாந்த் கிஷோர். ஆனால், அமித் ஷாவுடன் ஏற்பட்ட பிணக்கால் பிரசாந்த் கிஷோர் பாஜகவுடனான தொடர்பை முறித்தார். இப்போது அதற்கும் ஒருபடி மேல் சென்று பாஜக எதிர்ப்பு கொள்கைகள் கொண்ட கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் உத்தி வகுத்துக் கொடுத்துவருகிறார்.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணமூலும், தமிழகத்தில் திமுகவும் வெற்றி பெற துணை நின்றார். இந்நிலையில், அவர் தனது செல்போனை ஹேக் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதாகக் கூறுகிறார்.

கடைசியாக அவருடைய செல்போன் கடந்த ஜூலை 14 ஆம் தேதியன்று ஒட்டுகேட்கப்பட்டதாக தடயவியல் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்