40.64 கோடியைக் கடந்தது கோவிட் தடுப்பூசி எண்ணிக்கை

By செய்திப்பிரிவு

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 40.64 கோடியைக் கடந்தது.

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 50,69,232 முகாம்களில் 40,64,81,493 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 13,63,123 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நம் நாட்டில் இதுவரை மொத்தம் 3,03,08,456 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 38,660 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் வீதம் 97.32 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 38,164 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்ந்து 22 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,21,665 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.35 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 14,63,593 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 44,54,22,256 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி வீதம் 2.08 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.61 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 28 நாட்களாக இந்த எண்ணிக்கை 3 சதவீதத்திற்கு குறைவாகவும், 42 நாட்களாக 5 சதவீதத்திற்கு குறைவாகவும் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்