முடிவுக்கு வருகிறது பஞ்சாப் சிக்கல்: மாநில காங்கிரஸ் தலைவருடன் சித்து சந்திப்பு

By செய்திப்பிரிவு

முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து, மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகரை சந்தித்தார்.

பஞ்சகுலாவில் உள்ள அவரது இல்லத்திற்கே நேரில் சென்று சந்தித்தார். சித்துவுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னதாக, இன்று காலை முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஹரீஷ் ராவத்தை சந்தித்த நிலையில் சித்து மாநில காங்கிரஸ் தலைவரை சந்தித்துள்ளார்.

என்ன நடக்கிறது பஞ்சாப்பில்?

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் அம்மாநில காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் போர்க்கொடி துாக்கியுள்ளார். சித்துவுக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உட்கட்சி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்படவுள்ளார் எனக் கூறப்படுகிறது. அதேசமயம் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அமரீந்தர் சிங் முன்னிறுத்தப்படுவார்.

இந்நிலையில், தான் நவ்ஜோத் சிங் சித்து, மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகரை சந்தித்திருக்கிறார். சித்துவைத் தவிர பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரும், இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரும் கூட பஞ்சாப் காங்கிரஸ் செயற் தலைவர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

இவர்கள் இருவரும் அமரீந்தர் சிங் ஆதரவாளர்கள் எனக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்