பிரதமர் மோடியை சந்தித்து பேசிய போது எடியூரப்பா பதவி விலக தயாராக இருப்பதாக கூறியதாக தெரிகிறது. எடியூரப்பாக இன்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை இன்று சந்தித்து பேசினார்.
கடந்த இரு ஆண்டுகளாக கர்நாடகமுதல்வராக இருக்கும் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பாஜகவினரே கருத்துகள் கூறி வருகின்றனர். கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக எம்எல்ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் பகிரங்கமாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் எடியூரப்பாவை விமர்சிக்கின்றனர்.
அத்துடன் எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் முதல்வர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் எனவும் பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர். இதனால் பாஜக மேலிடபொறுப்பாளர் அருண் சிங் கடந்த மாதம் பெங்களூருவில் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தினார்.
இந்நிலையில் எடியூரப்பா நேற்று தனது மகன் விஜயேந்திராவுடன் அவசரமாக டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மாநில விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
» பிரதமர் மோடியுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு
» சித்துவுக்கு தலைவர் பதவி; அம்ரீந்தர் சிங் கடும் எதிர்ப்பு: சோனியாவுக்கு கடிதம்
பிரதமர் மோடியை சந்தித்து பேசிய போது எடியூரப்பா பதவி விலக தயாராக இருப்பதாக கூறியதாக தெரிகிறது. தனது உடல்நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.
அதேசமயம் தனது மகன் விஜேயேந்திராவுக்கு கர்நாடக மாநில பாஜகவில் முக்கிய பதவி வழங்க வேண்டும் என எடியூரப்பாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை இன்று காலை சந்தி்தது பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில் கர்நாடக மாநில பாஜக வளர்ச்சி குறித்து விவாதித்தாக கூறியுள்ளார். அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தி்த்து பேசினார்.
அப்போது அவரது ராஜினாமாவை ஏற்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து பாஜக தலைமை இறுதி முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.
எடியூரப்பா மாற்றப்பட்டால் முதல்வர் பதவியில் யாரை அமர்த்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலர் இருப்பதால் அவர்களை சமாதானம் செய்ய வேண்டிய தேவையும் இருப்பதால் இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவெடுக்கப்படாமல் போகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago