பாஜகவை பார்த்து பயப்படுபவர்களுக்கு காங்கிரஸில் இடமில்லை: ராகுல் காந்தி சாடல்

By செய்திப்பிரிவு

பாஜகவை பார்த்து பயப்படுபவர்களுக்கு காங்கிரஸில் இடமில்லை. அவர்கள் வெளியேற கதவு திறந்தே உள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆவேசமாக கூறினார்.

நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சமூகவலை தளங்களில் செயலாற்றும் கட்சி நிர்வாகிகளுக்கான சந்திப்பு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் 3500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களிடம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உரையாற்றினா். அவர் கூறியதாவது:

பாஜகவை பார்த்து பயப்படுபவர்களுக்கு காங்கிரஸில் இடமில்லை. அவர்கள் வெளியேற கதவு திறந்தே உள்ளது அவர்கள் தேவையில்லை. ஆர்எஸ்எஸ் கொள்கையில் நம்பிக்கையுள்ளவர்களும் நமக்கு தேவையில்லை.

காந்திய கொள்கை மீது நம்பிக்கையுடையவர்கள் மட்டுமே நமக்கு தேவை. அவர்களுக்காகவே நமது கட்சி செயல்படுகிறது. கட்சியின் கொள்கையில் இருந்து விலகிச் செல்ல விரும்புபவர்கள் கட்சியில் இருக்கத் தேவையில்லை. அவர்கள் வெளியேறலாம்.

பயமற்றவர்கள் தான் நமது கட்சிக்கு தேவை. காங்கிரஸ் கட்சிக்கு வெளியே பயமற்ற பலர் இருக்கிறார்கள். அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இல்லை. கட்சிக்கு வெளியே இருக்கிறார்கள். அவர்களை காங்கிரஸுக்குள் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்