மீண்டும் அதிகரிக்கும் கரோனா; தடுப்பு நடவடிக்கைகள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

By செய்திப்பிரிவு

நாட்டில் கரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பரவல் சற்று தணியத் தொடங்கியுள்ளது. தற்போது தினசரி கரோனா தொற்றுபாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்த சூழலில், வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலாயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் கரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது. இந்த மாநிலங்களுக்கு கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழுக்கள் அனுப்பப்பட்டன.

கரோனா தொற்று பரவலின் பாசிட்டிவ் விகிதம் நாட்டில் 73 மாவட்டங்களில் 10 சதவீதமாக இருந்தது என்று கடந்த வாரம் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்தது.

இதில் 46 மாவட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவை. இந்தநிலையில் வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

முககவசம் இல்லாமல் மக்கள் மலை பிரதேசங்கள், சந்தை பகுதிகளில் அதிக அளவு கூடுவது கவலை அளிப்பதாகவும் மாநில அரசுகள் இதனை சரியான முறையில் கவனித்து தீர்வு காண வேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இந்தநிலையில் நிலையில் மத்திய உள்துறைச் செயலாளர் அஜய்பல்லா மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தில் கூறப்பட்டுள்ளதாவது:

‘‘சில மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. எனவே கரோனா பரிசோதனைகள் முன்பு போல தொடர வேண்டும். பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மலைப்பிரதேசங்களில் கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமல் மக்கள் கூடுவது அதிகரித்துள்ளது. சந்தை, சுற்றுலாத்தலம் மற்றும் பொது இடங்களில் கரோனா விதிகளை மக்கள் கடைப்பிடிப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்தப்படாதது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா பரவலைத் தடுக்க தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்