இந்தியா

தினசரி கரோனா தொற்று 38,792; சிகிச்சையில் உள்ளோர்  4,29,946

செய்திப்பிரிவு

இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை கடந்த 118 நாட்களில் இல்லாத அளவு 38,792 ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,29,946 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,09,46,074

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 38,792

இதுவரை குணமடைந்தோர்: 3,01,04,720

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 41,000

கரோனா உயிரிழப்புகள்: 4,11,408

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 624

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 4,29,946

கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை: 38,76,97,935

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT