டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணி வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, வரும் இன்று காணொலி மூலமாக உரையாடினார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டுநடைபெற வேண்டிய இந்தத் தொடர், கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக தற்போது நடத்தப்பட உள்ளது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 115-க்கும்மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் மிகப் பெரிய இந்திய குழுவாகும். 18 விளையாட்டுகளை உள்ளடக்கிய மொத்தம் 69 போட்டிகளில் இந்தியா பங்கேற்பதும் இதுவே முதல்முறையாகும்.
வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவின் வாள்வீச்சு வீராங்கனை ( பவானி தேவி) ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார். ஒலிம்பிக் தொடரில் பாய்மரப் படகு போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் இந்திய பெண் என்ற பெருமையை நேத்ரா குமணன் பெற்றுள்ளார்.
» தடுப்பூசி பற்றாக்குறை; மத்திய சுகாதார அமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: ப.சிதம்பரம்
» இந்தியாவின் முதல் கரோனா நோயாளிக்கு மீண்டும் தொற்று உறுதியானது
சாஜன் பிரகாஷ் மற்றும் ஸ்ரீஹரி நடராஜ் ஆகியோர் நீச்சல் தரநிலையின் ஏ பிரிவில் வெற்றி பெற்று ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ள முதல் இந்திய நீச்சல் வீரர்கள் ஆவர்.
டோக்கியோ நகரில் வைரஸ் தொற்று அதிகரித்துவருவதால் ஒலிம்பிக் போட்டியைநேரில் காண பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணி வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, வரும் இன்று காணொலி மூலமாக உரையாடினார்.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர், இணை அமைச்சர் நிசித் பிரமானிக், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் கலந்து கொண்டனர்
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago