தடுப்பூசி பற்றாக்குறை; மத்திய சுகாதார அமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: ப.சிதம்பரம் 

By செய்திப்பிரிவு

தடுப்பூசி பற்றாக்குறை குறித்தும் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நாட்டில் கோவிட் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது உண்மை. ஆனால், தடுப்பூசி உற்பத்தித் திறன் மிகைப்படுத்தப்படுகிறது. தடுப்பூசி இறக்குமதி மர்மமாகவே உள்ளது. நடப்பாண்டு டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்பது, மத்திய அரசின் வெற்றுப் பெருமை அறிவிப்பு.

தடுப்பூசி குறித்த உண்மைகளையும் டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை குறித்தும் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்