நாடு முழுவதும் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து 3 கோடிக்கும் அதிகமான மக்கள் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்ககம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
“கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிகாக 37 ஆயிரத்து 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 899 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 8 லட்சத்து 74 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த பாதிப்பில், 1.46 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவில் இருந்து குணமடைந்து இதுவரை 3 கோடியே 14 ஆயிரத்து 713 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.22 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 219 பேராகக் குறைந்துள்ளது.
» அரசியல் விவகாரங்களைக் கவனிக்க ஆர்எஸ்எஸ் சார்பில் இணைப் பொதுச்செயலாளர் அருண் குமார் நியமனம்
» உ.பி. அமைச்சர்களுக்கு எத்தனை குழந்தைகள்?- மக்கள் தொகை சட்டம்; சல்மான் குர்ஷித் சரமாரி கேள்வி
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 724 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 8ஆயிரத்து 764 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 14 லட்சத்து 32 ஆயிரத்து 343 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 43 கோடியே 23 லட்சத்து 17 ஆயிரத்து 813 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 37.73 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
22 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago