நாடுமுழுவதும் கோவிட்-19 தடுப்பூசி; 37.60 கோடியை கடந்தது

By செய்திப்பிரிவு

நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 37.60 கோடியை கடந்தது.

கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 41,506 பேருக்கு புதிதாக கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கடந்த 14 நாட்களாக, தினசரி கோவிட் பாதிப்பு 50,000க்கும் கீழ் உள்ளது.

நாட்டில் இன்று கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 4,54,118. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 1.47 சதவீதம்.

நாட்டில் இதுவரை 2,99,75,064 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 41,526 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களின் சதவீதம் 97.20 சதவீதம். இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், 18,43,500 பரிசோதனைகள் செய்யப்பட்டன. நாட்டில் இதுவரை 43 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரு பக்கம் பரிசோதனை அதிகரித்து வரும் நிலையில், மறுபக்கம் வாராந்திர பாதிப்பு வீதம் குறைந்து வருகிறது. வாராந்திர பாதிப்பு வீதம் தற்போது, 2.32 சதவீதமாக உள்ளது. தினசரி பாதிப்பு வீதம், தொடர்ந்து கடந்த 20 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

நாட்டில் கோவிட் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 37.60 கோடியை கடந்தது. இன்று காலை 7 மணி வரை, 37,60,32,586 தடுப்பூசிகள், 48,33,797 அமர்வுகளில் போடப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் 37,23,367 தடுப்பூசிகள் போடப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்