மத்திய துறைமுக திட்டங்கள்: அமைச்சர் சர்பானந்தா சோனோவால் ஆய்வு

By செய்திப்பிரிவு

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் திட்டங்கள் பற்றி அமைச்சர் சர்பானந்தா சோனோவால் ஆய்வு செய்தார்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால், அமைச்சகத்தின் சார்பாக நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்களின் நிலை குறித்து இன்று ஆய்வு செய்தார்.

பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் அமைச்சரிடம் எடுத்துரைத்தார்‌. அமைச்சகத்தின் அனைத்து மூத்த அதிகாரிகளுடன் அமைச்சர் தமது அறையில் கலந்துரையாடினார்.

தமக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று சர்பானந்தா கூறினார். தமக்கு முன்னர் அமைச்சகத்தில் பணி புரிந்தோர் மேற்கொண்ட சிறப்பான பணிகளை முன்னெடுத்துச் செல்வதுடன், அனைத்து இலக்குகளையும் தாமதமின்றி, உரிய நேரத்தில் நிறைவேற்ற புதிய குழுவினருடன் இணைந்து தீவிரமாக பணியாற்றுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன், கூடுதல் செயலாளர் சஞ்சய் பந்தோபாத்யாயா, துறைமுகங்கள் இணைச் செயலாளர் விக்ரம் சிங், நிர்வாக இணைச் செயலாளர் லூகாஸ் எல் கம்சுவான் ஆகியோர் போக்குவரத்து மாளிகைக்கு வந்த அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்