உ.பி. மண்டல பஞ்சாயத்து தேர்தல்: பாஜக மிகப்பெரிய வெற்றி 

By ஏஎன்ஐ


உத்தரப்பிரதேசத்தில் நடந்த மண்டலப் பஞ்சாயத்து தேர்தலில் 825 இடங்களுக்கு 635 இடங்களை பாஜக மற்றும் அப்னா தளம் கட்சிகள் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.

ஆனால், பாஜக தலைமையிலான ஆளும் அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, உள்ளாட்சித் தேர்தலில் வலுக்கட்டாயமாக இடங்களைக் கைப்பற்றியுள்ளதாக சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்த பேட்டியில் “ 74 மாவட்டங்களில் நடந்த மண்டலப் பஞ்சாயத்து தேர்தலில் 635 இடங்களை பாஜகவும், அப்னா தளம் கட்சியும் கைப்பற்றியுள்ளன. ” எனத் தெரிவித்தார்

சமீபத்தில் நடந்த ஜில்லா பஞ்சாயத்து தலைவர் தேர்தலிலும் 75 இடங்களில் பாஜக மற்றும் அப்னா தளம் கட்சிகள் சேர்ந்து 67 இடங்களைக் கைப்பற்றின.

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு முதல்வர் ஆதித்யநாத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில் “ உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் மிகப்பெரிய வெற்றி என்பது யோகி ஆதித்யநாத் அரசின் அரசியல், மக்களுக்கான கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடுதான்” எனத் தெரிவித்தார்.

முதல்வர் ஆதித்யநாத்துக்கு வாழ்த்துத் தெரிவித்த ப ாஜக மாநில தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்

இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 17 மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈட்டவா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் குமார் பிரசாத் கூறுகையில் “ பார்புரா மண்டலத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தடுப்புகளை மீறி வந்தவர்களை தடுத்தபோது, சிலர் என் மீது தாக்குதல் நடத்தி தப்பிவிட்டனர்” எனத் தெரிவித்தார்.

பல்வேறு மாவட்டங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டன, செய்திகளைச் சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில் “ மாநிலத்தில் ஆளும் பாஜக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தங்களுக்கு சாதகமாக வாக்குகளைப் பெற்றுள்ளது. பண்டலப் பஞ்சாயத்து வேட்பாளர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கடத்தப்பட்டனர். சமாஜ்வாதிக் கட்சியின் வேட்பாளர்கள் வீடுகளில் திடீர் ரெய்டு நடத்தப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் ஜனநாயகத்தை பாஜக பிணையக் கைதியாக வைத்துள்ளது” எனத் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்