நடிகை நமீதாவும், அவரது கணவர் வீரேந்திர சவுத்ரியும் நேற்று திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்தனர். இவர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
பின்னர், கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் இரு வருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதன் பின்னர், நமீதா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நான் நடித்துள்ள ‘பவுவ்..பவுவ்’ திரைப்படத்தை ஓடிடி அல்லது திரையரங்குகளில் வெளியிட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
ஏழுமலையான் கோயிலில் இதற்கு முன்பு சுவாமி தரிசன ஏற்பாடுகள் நன்றாக இருந்தது. தற்போது கோயிலில் ஏற்பாடுகள் சரியில்லை. ஊழியர்கள் டென் ஷனாக உள்ளனர். இதற்கு முன் நிவாச ராஜு இணை நிர்வாக அதிகாரியாக இருந்த போது கோயில் நிர்வாகம் நன்றாக இருந்தது. தற்போது தரிசன ஏற்பாடுகள் கூட சரியில்லை.
கடவுள் முன் அனைவரும் சமம் என இருந்தாலும், ஊழியர்கள் கோயிலுக்குள் உட்காரவோ அல்லது நிற்க கூட பயப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago