ராமர் சேது பாலம் குறித்த வழக்கை அவசரமாக விசார ணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி இடையே 83 கி.மீ. கடல் பகுதியை ஆழப்படுத்தி, கப்பல்கள் சென்று வரும் வகை யில் பாதை அமைக்க சேது சமுத் திரம் திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உரு வாக்கப்பட்ட இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியா - இலங்கை இடையே புரா ணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ராமர் சேது பாலம் இத்திட்டத்தால் சேதமடையும் என்பதால், இத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் வலி யுறுத்தப்பட்டது.
இதுகுறித்து 2009-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சுப்பிர மணியன் சுவாமி வழக்கு தொடர்ந் தார். இந்நிலையில், சேது சமுத்திர திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசே அறிவித்தது. இதனால், வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்தார். இம்மனு குறித்து மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் பதில ளிக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.
இந்நிலையில், தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி அடங்கிய அமர்வு முன்பாக நேற்று ஆஜரான சுப்பிரமணியன் சுவாமி, ‘சேது சமுத்திர திட்டம் குறித்து நான் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். ராமர் பாலத்தை சேதப்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதற்காக எனது மனுவை அவசர வழக்காக உடனே விசாரணைக்கு எடுக்க வேண்டும்’ என்றார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘ராமர் சேது பாலம் மீது மத்திய அரசு கைவைத்தால், உடனே எங்களிடம் வாருங்கள். அதுவரை நீங்கள் கவலைப்பட தேவையில்லை. அதற்கு முன்பாக அவசரமாக இப்பிரச்சினையை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று கூறி, அவரது கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
26 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago