தனியார் துறையில் இட ஒதுக்கீடு உறுதி செய்ய சட்டம்: பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை

By குள.சண்முகசுந்தரம்

தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.

அரசு துறையில் இருப்பது போல தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதன் அடிப்படையில், கடந்த அக்டோபர் 2006-ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, இதுகுறித்து சிஐஐ, அசோசேம், பிக்கி ஆகிய வர்த்தக அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், தங்களின் உறுப்பு நிறு வனங்களில் எஸ்.சி., எஸ்.டி. பிரி வினருக்கு இடஒதுக்கீடு வழங்க இந்த அமைப்புகள் ஒப்புக் கொண் டன. அதேநேரம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், தேசிய பிற்படுத் தப்பட்டோர் ஆணையத்தின் தலை வரும் ஆந்திர மாநில முன்னாள் தலைமை நீதிபதியுமான ஈஸ் வரப்பா தலைமையில் டெல்லியில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆணையத்தின் உறுப்பி னர் எஸ்.கே.கார்வேந்தன் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

தனியார் துறையில் இடஒதுக் கீடு வழங்க ஒப்புக் கொண்ட மூன்று அமைப்புகளின் உறுப்பு நிறுவனங் கள் எஸ்.சி., எஸ்.டி. மாணவர் களுக்கு கல்வி உதவித் தொகை, பணி நியமனங்கள், தொழிற் பயிற்சிகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன. ஆனால், ரிலையன்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இடஒதுக்கீடு வழங்கவில்லை. தனியார் துறை யில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏதுவாக முறையான சட்டம் இயற்றப்படாததே இதற்குக் காரணம்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு தனியார் துறைகளில் 27 சத வீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண் டும் என்று 31.12.1980-ல் சமர்ப்பிக் கப்பட்ட மண்டல் கமிஷன் பரிந் துரையில் தெளிவாகக் கூறப் பட்டுள்ளது.

இதன் அடிப்படையிலும் தனி யார் துறையிலும் சமூக நீதியை நிலைநாட்டும் வகையிலும் தனி யார், கூட்டு மற்றும் கூட்டுறவுத் துறைகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 27 சதவீதமும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடும் வழங்குவதை சட்டமாக இயற்ற மத்திய அரசை வலியுறுத்துவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்த கோரிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கார்வேந்தன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்