ஆக.16 முதல் பள்ளிகள் திறப்பு: ஆந்திர முதல்வர் அறிவிப்பு

By என்.மகேஷ்குமார்

ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப் பட உள்ளன. வரும் 12-ம்தேதி முதல், அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் பாடங்கள் தொடங்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று அறிவித்தார்.

அமராவதியில் நேற்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் ஜெகன் பேசியதாவது:

ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். இதற்குள் கூடுதல் அறைகள், கழிவறைகள், தண்ணீர் வசதி போன்றவற்றை முடிக்க வேண்டும். வரும் 12-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும். புதிய கல்வி திட்டத்தை கண்டிப்பாக அமல் படுத்துவோம். இதன் மூலம் எந்த ஒரு பள்ளியும் மூடப்படாது.

இன்டர்மீடியட் (பிளஸ்-2)மாணவ, மாணவியருக்கு, அவர்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண்களில் இருந்து 30 சதவீதமும், இன்டர்மீடியட் முதலாம்ஆண்டில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 70 சதவீத மதிப்பெண்களையும் இணைத்து, இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு சான்றிதழ் தயாரிக்கப்படும். விரைவில் இதன் சான்றிதழ் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்வித் துறை அமைச்சர் ஆதிமூலபு சுரேஷ் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்