ஆந்திர மாநிலத்தில் 2 வனத்துறை அதிகாரிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 288 தமிழக தொழிலாளர்கள் உட்பட 347 பேரையும் திருப்பதி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன. இதைத் தடுக்க ஆந்திர அரசு அதிரடிப் படையை நியமித்துள்ளது. இந்நிலையில், கடந்த 15-12-2013-ல் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை அதிகாரிகள் தர், டேவிட் கருணா கரன் ஆகிய இருவரும் செம்மரக் கடத்தல் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இதில் வனத் துறை ஊழியரான ரமணா படுகாயம் அடைந்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில் ரேணிகுண்டா போலீ ஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக 435 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் திருப்பதி, காளஹஸ்தி, ரேணிகுண்டா, புத்தூர், நகரி, சத்யவேடு, சித்தூர், பீலேர் ஆகிய பல இடங்களில் உள்ள பஸ், ரயில் நிலையங்களில் இருந்து 355 பேரை கைது செய்தனர். 80 பேர் தலைமறைவாக உள்ளனர். மைனர் என்பதால் 4 பேர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.
மீதமுள்ள 351 பேர் வழக்கை எதிர்கொண்டனர். இதில் சிறை யிலிருந்தபோதே 4 தமிழர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த சிலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மீதமுள்ள 288 தமிழர்கள் காளஹஸ்தி, திருப்பதி, பீலேர் ஆகிய சிறைகளில் கடந்த 26 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
26 மாதங்களாக விசாரணை
இது தொடர்பாக திருப்பதி மாவட்ட 3-வது கூடுதல் நீதிமன்றத்தில் ரேணிகுண்டா போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது ஆள் கடத்தல், கொலை, பொது சொத்துக்களை சேதப்படுத்துதல், வனத்துறை சட்டத்தை மீறியது உள்ளிட்ட 26 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதனிடையே, ஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். மேலும் தமிழக அரசு சார்பில் ஒரு சட்ட உதவி குழு அமைக்கப்பட்டது.
திமுக சார்பிலும் வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்பட்டது. இவர்கள் தமிழர்களை விடுவிப்பதற்கு தேவையான சட்ட உதவிகளை செய்து வந்தனர்.
இந்த வழக்கில் கடந்த 26 மாதங்களாக விசாரணை நடந்தது. அப்போது 55 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், திருப்பதி நிவாசா உள் விளை யாட்டரங்கில் நேற்று தீர்ப்பு வெளி யாகும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. இதையடுத்து, 3-வது கூடுதல் நீதிபதி ராம்பாபு முன்பு 288 தமிழர்களையும் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
அப்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 288 தமிழர்கள் உட்பட 347 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு வழங்கி னார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
மேல் முறையீடு செய்வோம்
வனத்துறை அதிகாரிகள் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து திருப்பதி 3-வது கூடுதல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று ரேணிகுண்டா காவல் ஆய்வாளர் பாலய்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உறவினர்கள் மகிழ்ச்சி
இந்த வழக்கில் தீர்ப்பு வெளி யாகும் என அறிவிக்கப்பட்டதை யடுத்து, கைதிகளின் உறவினர்கள் நேற்று காலை முதலே திருப்பதி நீதிமன்றம், நிவாசா உள் விளையாட்டரங்கம் ஆகிய இடங்களில் காத்திருந்தனர். அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு வழங்கியதும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முன்னதாக, சுமார் ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் குவிந்த தால் அசம்பாவித சம்பவங்கள் நடை பெறாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. 350 போலீஸார் நிவாசா விளையாட்டு மைதானம் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago