தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் ஜூலை 7-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை தேசிய முன்னறிவிப்பு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அசாம் மற்றும் மேகாலயாவில் ஒரு சில இடங்களில் இன்று முதல் ஜூலை 8ம் தேதி வரை கனமழை முதல் தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், பிஹார், அருணாச்சலப் பிரதேசம், கேரளா , மாஹே, மேற்கு வங்கம் , சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களில் இன்று முதல் ஜூலை 7ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஜம்மு-காஷ்மீர், லடாக், கில்கிட்-பால்டிஸ்தான், முசாபராபாத், பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், கொங்கன் மற்றும் கோவா, கேரளா, மாஹே மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன், பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளது.
இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், கிழக்கு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், பிஹார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம், ஒடிசா, அசாம் மற்றும் மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா, குஜராத் , கடலோர ஆந்திரப் பிரதேசம், ஏனாம், ராயலசீமா, கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் 7ம் தேதி வரை மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago