கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கல்லுவாதுக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா (24). இவரது கணவர் விஷ்ணு, வளைகுடா நாட்டில் வேலை செய்கிறார். இந்த தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை இருந்தது. இந்நிலையில், ரேஷ்மா மீண்டும் கருவுற்றார்.
அந்த மகிழ்ச்சி செய்தியை கணவரிடம் சொல்ல இருந்த நிலையில்தான், முகநூலில் ஆனந்த் என்ற பெயரில் நட்பு வேண்டுகோள் அவருக்கு வந்தது. ஆனால் அது நிஜத்தில் ஆண் அல்ல. தனது உறவினர்கள்தான் தன்னிடம் விளையாடுகின்றனர் என தெரியா மல் அவர்களது வலையில் விழுந் திருக்கிறார் ரேஷ்மா.
ஒருகட்டத்தில், அந்த நேரில் பார்க்காத நபர் மீது காதல் வயப்பட்ட அவர், தான் ஏற்கெனவே ஒரு குழந்தைக்கு தாயாக இருப் பதையும், இப்போது இன்னொரு குழந்தையை வயிற்றில் சுமப் பதையும் கூறியிருக்கிறார்.
உடனே அந்தக் காதலன், ‘‘ஒரு குழந்தையுடன் வந்தால் மட்டுமே உன்னை ஏற்றுக்கொள்ள முடியும்’’ என சொல்லியிருக்கிறார். புதிய வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட ரேஷ்மாவும், தான் கருவுற்று இருப்பதை தன் கணவர் விஷ்ணு மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கூறவில்லை. இதனிடையே, விஷ்ணு மீண்டும் வளைகுடா சென்றார்.
இதனால் வீட்டிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்த ரேஷ்மா, குழந்தையை அருகில் இருந்த ரப்பர் தோட்டத்தில் வீசியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி குழந்தை இறந்தது. அதன்பின், குழந்தையை தூக்கி வீசியது யார் எனக் கண்டுபிடிக்க அப்பகுதியில் இருந்த இளம்பெண்கள் பலருக்கும் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டது. இதில், ரேஷ்மாதான் அந்தக் குழந்தையின் தாய் எனக் கண்டு பிடிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, அவர்கடந்த 22-ம் தேதி கைது செய்யப்பட்டார். விசாரணையில், முகநூல் காதல் விவகாரங்களை ரேஷ்மா கூறியுள்ளார்.
பயத்தில் தற்கொலை
பின்னர், சைபர் கிரைம் உதவியுடன் போலீஸார் துப்புதுலக்கிய போது, ரேஷ்மாவிடம் முகநூலில் பேசியிருப்பது அவரது உறவினர் ஆர்யாவும் (23), கரீஷ்மா (22) என்ற பெண்ணும் தான் என்பது தெரிய வந்தது. ரேஷ்மாவை ஏமாற்றுவ தற்காக (ப்ராங்க்) செய்வதற்காக அவர்கள் இவ் வாறு நாடகமாடி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், போலீஸார் தங் களை நெருங்குவதை அறிந்து பயந்து போன ஆர்யாவும், கரீஷ்மாவும் ஒரு குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். முகநூல் மூலம் ப்ராங்க் செய்வதாக தொடங்கிய இந்த விவகாரம், மூன்று உயிர்களை பறித்தது கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
13 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago