கரோனா தொற்று அதிகரிப்பு: திரிபுராவில் ஜூலை 9 வரை ஊரடங்கு நீட்டிப்பு

By பிடிஐ

கரோனா பரவல் அதிகமாகவுள்ள திரிபுரா மாநிலத்தில் வரும் 9 ஆம் தேதி (ஜூலை 9) வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 6 மாநிலங்களில் மட்டும் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கேரளா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர், மணிப்பூர் ஆகிய 6 மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த மாநிலங்களுக்கு மத்தியக் குழுவை நடத்தி ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்தது.

அதன்படி, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு 6 மத்தியக் குழுவினர் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். தலா 2 பேர் கொண்ட இந்தக் குழுவில் மருத்துவர், பொது சுகாதார நிபுணர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் வரும் 9ம் தேதி (ஜூலை 9) வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலர் குமார் அலோக் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

எவற்றுக்கெல்லாம் அனுமதி? எதற்கு தடை?

வரும் ஜூலை 9ஆம் தேதி வரை அன்றாடம் மதியம் 2 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். தலைநகர் அகர்தலா, ராணிர்பஜார், உதய்பூர், கைலாஷாஹர், தாராநகர், கோவாஇ, பெலோனியா ஆகிய 9 நகரங்களில் இந்த ஊரடங்கு அமல்படுத்துப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் 6 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நிலவும்.

ஊரடங்கு காலத்தில் வாகனங்கள் அதிகாலை 5 மணி முதல் 2 மணி வரையில்தான் இயக்கப்படலாம். இருப்பினும், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்குத் தடையில்லை. ஷாப்பிங் மால்கள் இயங்க அனுமதியில்லை. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மாலை 4 மணி வரை இயங்கலாம். மதம், சமூகம், அரசியல் கூட்டங்களுக்கு அனுமதியில்லை. உணவகங்கள் மதியம் 2 மணி வரை இயங்கலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிபுராவில் பிப்லப் தேவ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 44,111 ஆக பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்