உத்தரகாண்ட் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தேர்வு

By செய்திப்பிரிவு

உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை பாஜக கட்சித் தலைவராக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புஷ்கர் சிங் தாமி (வயது 45) இன்று தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து புதிய முதல்வராக அவர் விரைவில் பதவியேற்கவுள்ளார்.

உத்தரகாண்ட் மாநில பாஜக முதல்வர் திரேந்திர சிங் ராவத் கடந்த மார்ச் மாதம் மாற்றப்பட்டு புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டார். தீரத் சிங் ராவத் தற்போது பவுரி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் அவர் 6 மாதங் களுக்குள் எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட வேண்டும். வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அவர் பதவியேற்க வேண்டும். தற்போது கங்கோத்ரி தொகுதியும், ஹால்த் வானி தொகுதியும் காலியாக உள்ளன. இவற்றில் கங்கோத்ரி தொகுதியில் தீரத் சிங் ராவத்தை நிறுத்த கட்சி முடிவு செய்திருந்தது.

ஆனால் அடுத்த ஆண்டு உத்தராகண்ட் சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. பேரவையின் பதவிக்காலம் முடிவடைய ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில் சட்டப் பேரவை இடைத்தேர்தல் நடத்தப்படுவது இல்லை என்பது விதியாகும்.

எனவே, தீரத் சிங் ராவத்தை ராஜினாமா செய்யுமாறு கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து நேற்று அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக இன்று மாலை 3 மணியளவில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சிறப்பு பார்வையாளராக கூட்டத்தில் பங்கேற்றார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று தேர்வு செய்யப்பட்டார். பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் சட்டப்பேரவை பாஜக கட்சித் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

புஷ்கர் சிங் தற்போது கதிமா தொகுதியில் இருந்து இரண்டாவது முறை எம்எல்ஏவாக தேர்வானவர் ஆவார். உத்தரகாண்ட முன்னாள் முதல்வர் பகத் சிங் கோஷியாரிடம் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர் ஆவார். முதல்வர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

புதிய முதல்வராக சத்யபால் மகாராஜ் அல்லது தன் சிங் ராவத் பெயர்கள் தீவிர பரிசீலனையில் இருந்தன. ஆனால் புஷ்கர் சிங்கை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.புதிய முதல்வராக அவர் விரைவில் பதவியேற்கவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

47 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்