நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் ஆஜராவதிலிருந்து உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
இன்று நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், சி.நாகப்பன் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் இருவரும் ஆஜராவது 'சவுகரியத்தை விட அசவுகரியத்தையே அதிகம் ஏற்படுத்தும்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதாவது அசாதாரண சூழ்நிலைகளிலேயே இதுபோன்ற வழக்குகளில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியும் என்று வாதிட்டனர்.
ஆனால் நீதிபதிகள், “இவர்கள் பிரபலமான முக்கியஸ்தர்கள், இவர்கள் எங்கும் ஓடிவிடப்போவதில்லை. கோர்ட்டுக்கு இவர்கள் சென்றால் அங்கு பெரும் குழப்பம்தான் தோன்றுகிறது. இப்போது ஒன்றும் வித்தியாசம் ஏற்பட்டு விடவில்லை, ஒன்று நாங்கள் அவர்களுக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், அல்லது மேஜிஸ்ட்ரேட் கோர்ட் அளிக்கப்போகிறது.
இதற்கு பதில் அளித்த சுப்பிரமணியன் சாமி, “இந்தக் குழப்பம் இவர்களால் வேண்டுமென்றே உருவாக்கப்படுகிறது, நான் கோர்ட்டுக்கு தனியாகவே வருகிறேன், என்னுடன் ஒரு கூட்டத்தை நான் அழைத்து வருவதில்லை” என்றார்.
இதற்கு உடனடியாக குறுக்கிட்ட கபில் சிபல், “சுப்பிரமணியன் சாமி மிகவும் ஆற்றல் வாய்ந்தவர், அதனால் தனியாகவே சென்றாலும் அவரால் குழப்ப நிலையை உருவாக்க முடியும்” என்றார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், “நாங்கள் இதற்கு மேல் எதையும் தெரிவிக்க விரும்பவில்லை. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி என்ன கூறினாரோ அதை மட்டும்தான் நாங்கள் பார்க்க முடியும்.
"அனைத்து தரப்பினருக்கும் நியாயமான உத்தரவை வழங்குகிறோம். உச்ச நீதிமன்றம் விசாரணை நடைமுறைகளை தள்ளுபடி செய்யாது" என்று நீதிபதி கேஹர் கூறினார். இருவரும் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதே தவிர வழக்கையே தள்ளுபடி செய்ய இடமில்லை, விசாரணை மேலும் தொடர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சோனியா, ராகுல் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல் மற்றும் ஏ.எம்.சிங்வி ஆகியோர் வாதிடும்போது, பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கு இந்த வழக்கில் தலையிட உரிமை இல்லை. பாதிக்கப்பட்டவரே வழக்கு தொடர முடியும் என்று கூறியதை நீதிமன்றம் ஒரு வாதமாகவே பொருட்படுத்தவில்லை.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையைக் கையகப்படுத்தி அதன் சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago