ஜி 20 வரி ஒப்பந்த கட்டமைப்பில் இணைந்தது இந்தியா

பொருளாதார கூட்டுறவு வளர்ச்சி அமைப்பு (OECD) / ஜி20 வரிஒப்பந்த கட்டமைப்பில் இந்தியா இணைந்துள்ளது.

பொருளாதார டிஜிட்டல் மயம் காரணமாக எழுந்த வரிப் பிரச்சினைகளுக்கு ஒருமனதான தீர்வு காணவும், லாபத்தை மாற்றிக் கொள்ளவும், இந்தியா உட்பட பொருளாதார கூட்டுறவு வளர்ச்சி அமைப்பில் (OECD) / ஜி20 உள்ள பெரும்பாலான நாடுகள், உயர் நிலை அறிக்கையை ஏற்றுக் கொண்டன.

முன்மொழியப்பட்ட தீர்வு இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது - முதல் தூண்: இது சந்தை அதிகார வரம்புகளுக்கு, கூடுதல் லாபத்தை மறு ஒதுக்கீடு செய்வது . இரண்டாவது தூண்: குறைந்தபட்ச வரி மற்றும் வரி விதிகளுக்கு உட்பட்டது.

இலாப ஒதுக்கீட்டின் பங்கு மற்றும் வரி விதிகள் உள்ளிட்ட சில குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் வெளிப்படையாக உள்ளன. அவைகள் தீர்க்கப்பட வேண்டும். மேலும், இந்த திட்டத்தின் தொழில்நுட்ப விவரங்கள் வரும் மாதங்களில் தயாரிக்கப்படும். அக்டோபர் மாதத்திற்குள் ஒருமித்த ஒப்பந்தம் எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்வுக்கான அடிப்படைக் கோட்பாடுகள், சந்தைகளுக்கான அதிக இலாபத்திற்கான இந்தியாவின் நிலைப்பாட்டை நிரூபிக்கின்றன. அமல்படுத்துவதற்கு எளிதான ஒருமனதான தீர்வுக்கு இந்தியா ஆதரவாக உள்ளது. அதே நேரத்தில் இந்த தீர்வு, சந்தை அதிகார வரம்புகளுக்கு, குறிப்பாக வளரும் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு அர்த்தமுள்ள மற்றும் நிலையான வருவாயை ஒதுக்க வேண்டும்.

அக்டோபர் மாதத்திற்குள் முதலாவது தூண் மற்றும் இரண்டாவது தூண் ஆகியவற்றை ஒரு தொகுப்பாக அமல்படுத்த இந்தியா தொடர்ந்து ஆக்கபூர்வமாக செயல்படும் மற்றும் சர்வதேச வரிகொள்கையின் முன்னேற்றத்திற்கு சாதகமாக பங்களிக்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE