சீரம் நிறுவனத்தின் கோவோவேக்ஸ் மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை: மருத்துவக் குழு எதிர்ப்பு

By பிடிஐ


2 வயது முதல் 17 வயதுள்ள பிரிவினருக்கு செலுத்தப்படும் கரோனா தடுப்பூசியான சீரம் நிறுவன்தின் கோவோவேக்ஸ் மருந்தின் 2-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி அளிக்க மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணயத்தின் வல்லுநர்கள் குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

சீரம் மருந்து நிறுவனம் ஏற்கெனவே ஆக்ஸ்போர்ட் ,அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் அமெரி்க்காவின் நோவாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கோவோவேக்ஸ் மருந்தை தயாரிக்க சீரம் மருந்து நிறுவனம் முடிவு செய்தது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தடுப்பூசி தயாரிக்க சீரம் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கிளினிக்கல் பரிசோதனையை சீரம் நிறுவனம் தொடங்கியது. வரும் செப்டம்பர் மாதம் மருந்தை அறிமுகம் செய்ய சீரம் நிறுவனம் திட்டமிட்டிருந்தது .

இந்த மருந்து 2 வயது முதல் 17வயதுக்குள் இருக்கும் பிரிவினருக்கு செலுத்தப்படும் கரோனா தடுப்பூசியாகும். இந்த கோவோவேக்ஸ் மருந்தின் முதல் கட்ட கிளினிக்கல் பரிசோதனை முடிந்த நிலையில், 2-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனைக்கு சீரம் நிறுவனம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி கோரியது.

இதன்படி 12 முதல் 17 வயதுள்ள பிரிவில் 460 குழந்தைகளுக்கும், 2 முதல் 11 வயதுள்ள குழந்தைகள் 460 பேருக்கும் 2-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையை 10 மையங்களில் நடத்த அனுமதி கோரியது.
இந்நிலையில், மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் வல்லுநர்கள் குழு சீரம் நிறுவனத்தின் 2-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தகவல்கள் கூறுகையில் “ தடுப்பூசிக்கு எந்த நாடும் இதுவரை அனுமதியளிக்காத நிலையில், 2-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையை சீரம் நிறுவனம் நடத்த மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு எதிர்க்கிறது.

தற்போது நடத்தப்பட்டு வரும் பரிசோதனையில் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த புள்ளிவிவரங்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறித்த விவரங்கள் ஆகியவற்றை சீரம் நிறுவனம் தாக்கல் செய்ய வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE