‘‘சாதாரண மனிதர்களின் வரிச்சுமையை ஜிஎஸ்டி குறைந்துள்ளது’’- 4 ஆண்டுகள் நிறைவு; பிரதமர் மோடி பாராட்டு

By செய்திப்பிரிவு

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு்ள்ள பதிவில் சாதாரண மனிதர்கள் மீதான வரிச்சுமையை ஜிஎஸ்டி குறைத்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் முதல் அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரி, சேவை வரி, உற் பத்தி மற்றும் சுங்கத்துறையில் விதிக்கப்படும் கூடுதல் வரி, சிறப்பு கூடுதல் சுங்க வரி, செஸ், சர்சார்ஜ் உள்ளிட்ட அனைத்து வரி விதிப்புகளும் நீக்கப்பட்டு ஒரு முனை வரியாக ஜிஎஸ்டி வரியாக விதிக்கப்படுகிறது.

மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (வாட்) மத்திய வரி, வாங்கும்போது வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு வரி, விளம்பரங்கள் மீதான வரி, லாட்டரி, பந்தயம், சூதாட்டம், மாநில அரசு விதிக்கும் பிற வரி விதிப்புகளுக்கு மாற்றாகவும் ஜிஎஸ்டி வரி அமைந்துள்ளது.

இந்தநிலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர கூறியுள்ளதாவது:

‘‘இந்தியாவின் பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி, ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது. இது வெளிப்படைத்தன்மை, இணக்கம் மற்றும் ஒட்டுமொத்த வசூல் ஆகியவற்றை கணிசமாக அதிகரிக்கும் அதே வேளையில் சாதாரண மனிதர்கள் மீதான வரிகள், இணக்கச் சுமை மற்றும் ஒட்டுமொத்த வரிச்சுமை ஆகியவற்றைக் குறைத்துள்ளது. # 4YearsofGST’’ என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE