உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மாட்டிறைச்சி விழா நடத்தக் கூடாது: ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தடை

By என்.மகேஷ் குமார்

ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் சங்கத்தினர் இன்று (வியாழக்கிழமை) மாட்டிறைச்சி விழா நடத்தப்போவதாக அறிவித்தனர். இதற்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தெலங்கானா மாநில போரட்டத் தில் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் பங்கு முக்கியமானது. இதில் பல மாணவர்கள் தங்களது உயிரையும் தியாகம் செய்துள்ளனர்.

இதனால் உஸ்மானியா கல்லூரி மாணவர்களுக்கென தெலங்கானா மாநிலத்தில் தனி மதிப்பு உள்ளது. இந்நிலையில், அங்கு படிக்கும் தலித் மற்றும் பழங்குடி மாணவர் சங்கத்தினர் இம்மாதம் 10-ம் தேதி மாட்டிறைச்சி விழா நடத்தப்போவதாக அறிவித் தனர். இதனால் ஹைதராபாத்தில் எதிர்ப்பு கிளம்பியது. பாஜ எம்எல்ஏ ராஜாசிங் கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.

மாட்டிறைச்சி விழாவினை நடத்தக் கூடாது என்றும் இதில் மாநில அரசு தலையிட வேண்டும் என்றும் அவர் அறிக்கை விடுத்தார். மேலும் மாட்டிறைச்சி விழாவினை பாஜ தொண்டர்கள் தடுத்து நிறுத்துவார்கள். இதனால் உயிர் தியாகத்திற்கும் தயார் எனவும் கூறி இருந்தார்.

இது தொடர்பாக ஹைதராபாத் நகர நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு பதிவானது. இதனை விசாரித்த நீதிபதிகள், 10-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் எந்தவித விழாவும் நடத்தக் கூடாது என உத்தரவிட்டது. இதனிடையே நேற்று ராஜா என்பவர் மாட்டிறைச்சி விழாவினை நடத்தக் கூடாது என வலியுறுத்தி ஹைதராபாதில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், நகர நீதி மன்றம் வழங்கிய உத்தரவை உடனடியாக அமல் படுத்த வேண்டும் என்றும், உஸ் மானியா பல்கலைக்கழகத்தில் எந்தவித அசம்பாவிதங்கள் நடை பெறாதவாறும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறும் நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும் என்று உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து நேற்று உஸ் மானியா பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு கருதி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்