பொது சுகாதாரத்துக்கு ரூ. 23,220 கோடி; விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ. 15 ஆயிரம் கோடி மானியம்: அனுராக் தாக்கூர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பொது சுகாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு ரூ. 23,220 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ. 15 ஆயிரம் கோடி மானியம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.

கரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறைகளில் மீண்டெழுந்து வரும் பொருட்டு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதத் திட்டத்தை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

அதன்படி கரோனா காரணமாக பாதிப்புக்குள்ளான துறைகளுக்கு 1.1 லட்சம் கோடி ரூபாய் கடன் உத்தரவாதத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

8 பொருளாதார சீர்த்திருத்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். அதில் 4 திட்டங்கள் புதியவை. சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு கடன் உத்தரவாத திட்டத்தின்படி சுற்றுலா துறையைச் சார்ந்தவர்கள் தங்கள் கடனை செலுத்தவும் தொழிலை மீண்டும் தொடங்கவும் கடனுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க சுற்றுலா பயணிகளுக்கு சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா அளிக்கப்படும்.

மருத்துவமனைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை அமைக்க ரூ.100 கோடி வரை கடன் வழங்கப்படும்.

அவசர கால கடன் வசதியாக தொழில்துறையை சேர்ந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். அரசு உத்தரவாதத்துடன் வங்கிகள் மூலமும் தொழில்துறைக்கு கடனுதவி வழங்கப்படும்.

மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது:

* விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ. 15 ஆயிரம் கோடி மானியம் வழங்கப்படும்.
* கரோனா ஊரடங்கை தொடர்ந்து ஏழை- எளிய மக்களுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

* இததற்காக மத்திய அரசு இதுவரை 2,27,841 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.

* இதற்கான நிதி செலவு ரூ. 93,869 கோடி ஆகும்

* பொது சுகாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு ரூ. 23,220 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

* இதன் மூலம் மாநிலங்களில் மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதுடன் அரசு மருத்துவமனைகளுக்கான மருத்துவர்கள், * செவலியர் உள்ளிட்டோரை கூடுதலாக பயணியமர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்